அலைகள் பாடிய கவிதைகள்

கடற்கரை இலக்கிய வட்ட விழா

கடற்கரை பதிப்பகம் துவக்கவிழா
மற்றும் அருள் ஸ்நேகம் அவர்கள் எழுதிய அலைகள் பாடும் கவிதைகள்
நூல் வெளியீட்டு விழா 30-12-2018 மாலை 5 மணிக்கு சின்னத்துறையில் வைத்து நடைபெற்றது

அண்மையில் மறைந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடற்கரை இலக்கிய வட்ட ஒருங்கிணைப்பாளர் இரையுமன் சாகர் வரவேற்புரையாற்றினார்

CPI (M) மாவட்ட செயலாளர்
தோழர்.ஆர் செல்லசுவாமி மற்றும்
உயர்நீதி மன்றம் மதுரை கிளையை சார்ந்த வழக்கறிஞரும், தமிழ் மீனவர் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளருமான திருமதி .ரஜினி மாஹி. , ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

அருட்பணி. பங்கிராஸ்( வழக்குரைஞர், திருவனந்தபுரம் ) அவர்கள் தலைமை தாங்கி பேசினார்.

பதிப்பகம் துவக்கி வைத்து எழுத்தாளர் குறும்பனை சி பெர்லின், (சேலாளி பதிப்பகம்) அவர்கள் உரையாற்றினார்.

திருமதி. வெஞ்சஸ்லாசாள் அவர்கள் நூல் வெளியிட, திரு. மைக்கல் பிராங்கோ (சமூக ஆர்வலர் ) மற்றும்
முன்னாள் பஞ்சாயத்து தலைவர்
திரு . டிக்கார்தூஸ் ஆகியோர் நூலை பெற்றுக் கொண்டனர்.

முதுமுனைவர். மு. ஐயப்பன். (துணை பேராசிரியர், வ.உ.சி கல்லூரி தூத்துக்குடி.) நூலை ஆய்வு செய்து பேசினார்.

திரு. உவரி எழிலன். ( தமிழ் மீனவர் கூட்டமைப்பு )
திரு. தக்கலை ஐ. கென்னடி,( கவிஞர் )
எழுத்தாளர் திரு. கடிகை பெர்னார்டு,
திரு. JMS. தியாகசீலன்.
(ஆசிரியர், மருதாணி மாதஇதழ்)
திரு. கடிகை அருள்ராஜ், (நாவலாசிரியர் ) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்

தோழர். அருள் ஸ்நேகம், (நூலாசிரியர் ) ஏற்புரை வளங்கினார். அவர் கடற்கரை இலக்கிய வட்டம் சார்பில் கடற்கரை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

திருமதி லூத்தம்மா சைமன் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கவிதை போட்ட்டியில் முதல் பரிசை பெற்ற கெலன்நகர் ஹெல்ஜின் தொபியாஸ் அவர்கள் கவிஞர் ஐ. கென்னடி அவர்கள் மூலம் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

செல்வி. டைனி கிறிஸ்டோபர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*