பி.இ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு!

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு பி., பி.டெக் பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்
பணி : தொழில்நுட்ப உதவியாளர்
காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி : பி., பி.டெக்
ஊதியம் : ரூ.30,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://www.annauniv.edu/pdf/UPE%20Admin%20Advertisment.pdf இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.annauniv.edu என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Coordinator, University with Potential for Excellence, Kalanjiyam Building, 2nd Floor, OPP. to Mining Engineering, Anna University, Chennai – 600 025.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 14.09.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*