நவம்பர் 21: உலக மீனவர் தினவிழா முன்னிட்டு குளச்சல் விசைப்படகு யூனியன் நிர்வாகிகள் அமைச்சர் மாண்புமிகு. ஜெயக்குமார் அவர்களை சந்தித்தனர்

நிகழ்வில் கலந்துகொள்ளவேண்டும் என்று நேரில் சென்று அழைப்பு விடுக்க கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி, குளச்சல் ஊர் நிர்வாகம், குளச்சல் விசைப்படகு யூனியன் நிர்வாகிகள் சென்னை சென்று மீன்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு. ஜெயக்குமார் அவர்களை சந்தித்தனர்.

  • மீனவர்தின விழாவை அரசுவிழாவாகக் கொண்டாடுவதுபோல் அரசு விடுமுறை வழங்க வேண்டும்
  • 60 வயதுக்குமேல் மீனவர்களுக்கு நலவாரியம் மூலம் ஓய்வூதியம் வழங்கவேண்டும்.
  • மீனவத் தலைமை லூர்தம்மாள் சைமன் அவர்களின் நினைவுநாளை அரசு விழாவாகக் கொண்டாடவேண்டும். அவர்களுக்கு நினைவுமண்டபம் அமைக்கவேண்டும்
  • ஆழ்கடல் மீன்பிடிக்கும் விசைப்படகுகளுக்கு தமிழக அரசே பெர்மிட் வழங்கவேண்டும்.
  • நாட்டுப்படகு மீனவர்களுக்கு மாதம்தோறும் வழங்கும் மானிய மண்ணெண்ணெயை 300 லிட்டரிலிருந்து 500 லிட்டராக உயர்த்தி வழங்கவேண்டும்.
  • மீனவர் கூட்டுறவு சங்கத்தில் மீனவர்கள் ஓய்வுபெறும் வயதை 60-லிருந்து 70 என அறிவித்து மீன்வளத்துறை பயன்களை 70வயதுவரை ஏழை மீனவர்களுக்கு வழங்க வேண்டும்
  • மிக மிக மோசமாக பழுதடைந்துள்ள சிங்காரவேலர் குடியிருப்பு வீடுகளை மாற்றிவிட்டு புதியவீடு வழங்கவேண்டும்.
  • மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வீடுகளுக்கான மதிப்பீட்டு நிதியை இரட்டிப்பாக வழங்க வேண்டும்
  • தமிழக அரசின் மீன்வளத்துறையை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை என்று பெயர்மாற்றி மீனவர்நலன்சார்ந்த திட்டங்களை முன்னிலைப்படுத்தவேண்டும்
    தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை மூலம் மீன்வள வங்கி அமைக்க வேண்டும்
    இதுபோன்று இன்னும் பல கோரிக்கைகளும் மீன்வளத்துறை அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டது.    
    — குறும்பனை பெர்லின்

     

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*