சின்னத்துறையை சார்ந்த ஜாண் தலைசுற்றால் விசை படகிலிருந்து கடலில் தவறி விழுந்து மரணம்

 

சின்னத் துறையை சார்ந்த ind-a என் 15mm 37 74 இம்மானுவேல் என்ற விசைப்படகு 3 11 2019 ஆம் தேதி கொச்சியில் இருந்து 15 நபர்களுடன் தொழிலுக்கு சென்றது.

21 ஆம் தேதி மாலை 5 மணியளவில் குஜராத் மாநிலம் சூரத் என்னுமிடத்தில், சின்ன துறையைச் சார்ந்த பிலவேந்திரன் என்பவருடைய மகன் ஜாண் வயது 61 தலைசுற்று ஏற்பட்டு கடலில் விழுந்துவிட்டார், சக மீனவர்கள் அவரை கஷ்டப்பட்டு விசைப்படகில் ஏற்றியபோது அவர் மயக்க நிலையில் இருந்தால் உடனே அவர்கள் அவரை பக்கத்தில் உள்ள துறைமுகத்தில் 22ஆம் தேதி காலையில் கொண்டு வந்து சேர்த்தார்கள். அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்து இந்நிலையில் அவரை சூரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் எடுத்துச் சென்றார்கள் துரதிஸ்டவசமாக 22ஆம் தேதி அவர் உயிர் பிரிந்தது உடனே பிரேத பரிசோதனை செய்து இன்று அவருடைய உடலை திருவனந்தபுரம் கொண்டு வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. நாளை காலை திருவனந்தபுரம் அவருடைய உடல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசைப்படகில் 15 நபர்கள் இருந்தார்கள் அதில் சின்ன துறைசார்ந்த ராஜு ,அன்றோ, பினிஷ், அண்ட் ரோ ரூபன், இம்மானுவேல் ஆண்டனி, கார்லோஸ், ஜான், ஆல்பர்ட், சேவியர் ,குமார் ஆகியோரும் அசாமை சார்ந்த விக்னேஷ் என்பவரும் ஆவார்கள். அரசு உரிய நடவடிக்கை எடுத்து இறந்த நபரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க பணிவோடு வேண்டுகிறேம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*