தூத்தூர் மண்டல மீனவர்களின் படகுகள் சுழல் காற்றில் சிக்கி விபத்துக்குள்ளானதாக தகவல்

தூத்தூர் மண்டல படகுகள் மற்றும் வள்ளவிளை பகுதியை சார்ந்த மீனவர்களின் படகுகள் சிலநாட்களுக்கு முன்னதாக குமரிமாவட்டம் பட்டணம் துறைமுகத்திலிருந்தும், மற்றும் ஏறக்குறைய 98 விசைப்படகுகள் கொச்சின் துறைமுகத்திலிருந்து கடலுக்குள் சென்றதாக கூறப்படுகிறது.

இன்நிலையில் மூன்று நாட்களாக நமது மீனவர்களின் படகுகள் சுழல் காற்றில் சிக்கி ஏறக்குறைய 50 படகுகள் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வந்த வண்ணமாகவை உள்ளது. 

இதனால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்கள் பெரும் துயரத்தில் உள்ளனர்.

அவர்களது படகுகள் கடலில் ஜிபிஎஸ் எண் 13-30-500 69-45-500 என்ற இடத்தில் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.மேலும் சுழல் காற்று காரணமாக தீடீர் என்று கடலின் உயரம் வழக்கத்திற்க்கு மறாக இருந்ததாகவும் அதிலுள்ள மீனவர்கள் கூறியுள்ளனர் எனவே ஏதேனும் அசும்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க அந்த படகுகளை மீட்டு கரை சேர்க்கவும் மீனவர்கள் VHF 16 சேனலில் தொடர்புக்கொண்டு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் பல மீனவர்கள் தங்களது அருகாமையில் வந்த கப்பல் மாலுமிகளை தொடர்பு கொண்டு அவர்களை காப்பாற்ற வேண்டுகோள் வைத்ததை தொடர்ந்து, உயிர் பயத்துடன் படகை விட்டு விட்டு ஏறக்குறைய 18 படகுகளின் தொழிலாளர்கள் கப்பலில் தஞ்சம் புகுந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அந்த படகிலிருந்து தப்பித்து கப்பல் வளியாக கரைக்கு வருபவர்களிடம் இது குறித்தஉண்மை தன்மை அறிய முடியும் என கூறப்படுகிறது.

பல படகின் உண்மை நிலை கேழ்விக்குறியாக உள்ளதாகவும்,இதுவரையிலும் எந்த தகவலும் நேரடியாக தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*