நீரோடு முதல் பழவேற்காடு வரை உள்ள மீனவர்கள் கறுப்புக்கொடி ஏந்தி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காப்படட்டணம் துறைமுகத்தின் அருகில் பரக்காணியில் தடுப்பணை கட்டப்படுவதால், தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் மண் திட்டு ஏற்பட்டு மீனவர்கள் உயிர்கள் பறி போவதும், அவர்களின் படகுகள் சேதமடைவதும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பாக 2 மீனவர்கள் தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் மாயமானார்கள்.

உயிர்களை காவு வாங்கும் தடுப்பணையை அப்பகுதியிலிருந்து அகற்றக்கோரி 31. 7. 2020 அன்று காலை 10 மணியளவில் நீரோடு முதல் பழவேற்காடு வரை உள்ள மீனவர்கள் கறுப்புக்கொடி ஏந்தி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

நாகை மாவட்டம் புதுப்பேட்டை மீனவ கிராமத்தில் உள்ள ஆண்களும் பெண்களும் இதில் பங்கேற்றனர்.

கொள்ளுக்காடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர்களும் மல்லிப்பட்டினம் மீனவர்கள் ராதாபுரம் மீனவர்கள் இப்படி அத்தனை கடற்கரை கிராமத்தில் உள்ள மீனவர்களும் நூற்றுக்கணக்காக கலந்து கொண்டனர்.

நீரோடி முதல் பழவேற்காடு வரை உள்ள மீனவர்களின் ஒற்றுமை இப்போராட்டத்தில் பிரதிபலித்தது.

இன்று துபாயிலும் மீனவர்கள் தடுப்பணை போராட்டத்தில் கறுப்புக் கொடி ஏந்தி அறவழியில் போராட்டம் நடத்தினர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*