Short News

40-வது நாளாக நீடிக்கும் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம்

40-வது நாளாக நீடிக்கும் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம்  கன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் 40-வது நாளாக நீடிப்பதால் மீன்பிடி தொழில் முடங்கி உள்ளது. இதனால் ரூ.500 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Short News

மீனவர்கள் 11ந்தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை; அந்தமான் அருகே தீவிர புயலாக வலுப்பெற்ற புல்புல்

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக பெய்தது. இதனால் கடலோர பகுதிகளில் சில இடங்களில் பலத்த மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது. இந்நிலையில், அரபி கடலில் கியார் புயல் தோன்றியது. தொடர்ந்து மஹா என்ற மற்றொரு புயல் அரபி கடலில் உருவானது. […]

Short News

பள்ளம்துறையில் வீடுகளை சூழ்ந்த மழைநீரை அகற்றக்கோரி பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜாக்கமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளம்துறை ஊராட்சியில் லூர்து காலனியில் சுமார் 35-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இது தாழ்வான பகுதி என்பதால் மழை காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து வீடுகளை சூழ்ந்துவிடும். இதற்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் தற்போது பெய்த […]

Short News

கொல்லங்கோடு அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்த மர்மநபர்கள்

கொல்லங்கோடு அருகே கல்வனஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் மேரிஜெயா (வயது 43). இவர், அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை கடையை திறப்பதற்காக மேரிஜெயா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரின் பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். மோட்டார் சைக்கிள் மேரிஜெயாவின் அருகில் […]

Lijo santosh trophy
Short News

சந்தோஷ் கோப்பை கால்பந்து . லிஜோ ஹேட்ரிக் சாதனை

ஹீரோ சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில் 4-1 என்கிற கோல் கணக்கில் ஆந்திர மாநில அணியை தோற்கடித்து வெற்றி வாகை சூடியுள்ளது தமிழக அணி. 4 கோலில் 3 (ஹேட்ரிக்) கோல்களை அடித்து சாதனை புரிந்துள்ளார் லிஜோ . குமரி மாவட்டம் இரையுமன்துறை மீனவ கிராமத்தை சார்ந்த லிஜோ […]

Short News

நடுக்கடலில் தத்தளத்த நிர்மல் மாதா விசைபடகையும், 10 மீனவர்களையும் மீட்ட சக மீனவர்கள்

தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று (6.11.2019) அதிகாலை 2 மணி அளவில் பூத்துறையை சார்ந்த சீபு என்பவருக்கு சொந்தமான நிர்மல் மாதா விசைப்படகில் குமரி மாவட்டம் மற்றும் வட இந்தியாவை சேர்ந்த 10 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தார்கள். நேற்று மாலையில் திடீரென படகு பழுதடைந்துள்ளது. முட்டம் ஆழ்கடல் […]

Short News

குளச்சலில் அகில உலக மீனவர் தினம்

நவம்பர் 21 உலக மீனவர்தின விழா மாநாடு குளச்சல் துறைமுகத்தில் நடைபெறவிருக்கின்றது. குமரி மாவட்ட கடலோர மீனவர்களும் உள்நாட்டு மீனவர்களும் இணைந்து குளச்சலில் சங்கமிக்கும் இவ்விழாவிற்கு தமிழக அரசின் மீன்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு. D.ஜெயக்குமார் அவர்களும், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. H.வசந்தகுமார் அவர்களும், கோட்டாறு மறைமாவட்ட ஆயர் […]

Short News

தூத்தூர் கடற்கரையில் ராட்சத அலையில் சிக்கி பெண் மரணம்

நித்திரவிளை அருகே எஸ்.டி.மங்காடு, வாவறை பகுதியை சேர்ந்தவர் நேசையன் (வயது 64), பள்ளி வேன் டிரைவர். இவருடைய மனைவி பால்தங்கம்(54). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். நேற்று காலையில் நேசையன் கோவிலுக்கு செல்வதற்காக மனைவியை அழைத்தார். ஆனால், பால்தங்கம் மறுத்ததால் நேசையன் மட்டும் கோவிலுக்கு சென்றார். சிறிது […]