கடற்கரை விருது 2019

 

கடற்கரை விருது 2019

கடற்கரை இலக்கிய வட்டம் சார்பில் நெய்தல் படைப்பாளர்களுக்கான ‘கடற்கரை விருது 2019’ நிகழ்வு நாகர்கோவிலில் நடைபெற்றது. 

குமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள கஸ்தூரிபா மாதர் சங்க அரங்கில் 19-05-2019 அன்று ஞாயிறு மாலை 4 மணிக்கு கடற்கரை விருது 2019 நிகழ்வு நடைபெற்றது. 

விழாவிற்கு எழுத்தாளர் அருள் ஸ்நேகம் அவர்கள் தலைமை தாங்கினார். கடற்கரை இலக்கிய வட்ட ஒருங்கிணைப்பாளர் இரையுமண் சாகர் வரவேற்று பேசினார்.
திரு. மரிய தாசன் (கடலோர மக்கள் வளர்ச்சி மன்றம்), எழுத்தாளர் என். சுவாமிநாதன் ( காமதேனு வார இதழ்), எழுத்தாளர் திருத்தமிழ் தேவனார் (தெற்கு எழுத்தாளர் இயக்கம்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  

கவிஞரும் ஆய்வாளருமான தொ. சூசைமிக்கேல் அவர்கள் சிறப்புரையாற்றி விருதுகளை வழங்கினார்.  சிறுகதை பிரிவில் கடலோடி கதைகள் நூலுக்காக எழுத்தாளர் சப்திகா அவர்களும்,  கட்டுரை பிரிவில் இனையம் காக்க இணைவோம் நூலுக்காக எழுத்தாளர் குறும்பனை சி பெர்லின் அவர்களும்,  நாவல் பிரிவில் வர்ளம் நூலுக்காக எழுத்தாளர் முட்டம் எஸ். வால்டர் அவர்களும்,  கவிதை பிரிவில் உடையும் கண்ணாடிகள் நூலுக்காக கவிஞர் விஜய் சேசுலா சார்பில் கவிஞர் லியோன் சசி அவர்களும் சிறந்த நூலுக்கான விருதுகளை  பெற்றுக் கொண்டனர். 

விழாவில் கவிஞர் கடிகை ஆன்றனி,  எழுத்தாளர் செள்ளு செல்வராஜ், எழுத்தாளர் தமிழ்வானம் சுரேஷ்,  உட்பட பலர் கலந்து கொண்டனர். 
எழுத்தாளர் நம்பை ஷா நன்றி கூறினார். 
எழுத்தாளர் ஜஸ்டின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*