ஞான ஒளி ( கவிதை)

ஊறுகாய் போட முடியாத
உடம்பை கொண்டு –
ஊறு விளைவிக்கும்
கூறு கெட்ட மனிதா..!  – நான்
கூறுவதை கேள் மனதால்..

உறவுகள் எல்லாம் பிரம்மை..!
உலகளானே என்றும் உண்மை.!

காண்பது யாவும் மாயை..
கடவுளே எப்பவும் மேன்மை..!

பூமி அது அன்னோனியம் – தேவ
ஆவி அது அன்போவியம்.!

காலம் எனும் மன்மதன்
அனைத்து அழகையும் குடிக்கிறான் –
ஞாலம் எனும் தேவவதம்
அனைத்து உயிரையும் முடிக்கிறான்..

ஆண்ட மனிதனும்,
அடிமை மனிதனும்
அழிந்து போவான் –
அண்டம் அணு அளவும்
அச்சு பிழராது..

ஆண்டவர் போட்ட
பிரபஞ்ச அஸ்திவாரத்தை
அசைத்து பார்க்க
அகிலத்தில் ஆள் உண்டோ..!?

அசுத்த உடம்பில் இருக்கும்
பரிசுத்த ஆன்மாவை
அடையாளம் கண்டு கொண்டால்
வீடுபேறு எனும் மேன்மை கிடைக்கும்.

உலக மாயையான
சொத்து ,சுகம் அது கவர்ச்சி..!
மதி கெட்ட மாந்தர்க்கு அதுவே புகழ்ச்சி..!

உன்னத சேவையான
தர்மம் , தியாகம் அது
இறைத் தூண்டல்..!
மதியுள்ள மாந்தர்க்கு அது
ஆன்மா வேண்டல்..!

புவியறை உன்னை
சுமப்பதும்,
கல்லறை உன்னை
சிதைப்பதும்
கருணையின் அன்பால்..

புழுவுகள் தின்னும்
உடம்பின் மேலும்
பூச்சிகள் அரிக்கும்
சொத்தின் மேலும் – உன்
புனித ஆன்மாவை
சிக்க வைக்காதே..!

உன் சக்திக்கு மீறிய
கோட்ப்பாட்டின் படி
ஒவ்வொரு செயலும் நடப்பதால்
நீ அதை
வெறும் வெடிக்கை பார்ப்பவனாக
மட்டுமே இரு
நிம்மதியாக இருப்பாய்..!

ஞானத்தின்  ஒளியே
ஞாலத்தின் விழி..!_ அதை
நாடி துதி..!

                                                             கவிஞர். விஜய் சேசுலா

விஜய் சேசுலா
விஜய் சேசுலா

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*