டிக்டாக் வீடியோவால் வந்த விபரீதம்: 28 குடும்ப பெண்கள் கண்ணீர் புகார்.!

டிக் டாக் செயலி கடந்த 2016 ஆம் ஆண்டு, சுமார் 75 மொழிகளில் பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. சீன நிறுவனமான இந்த டிக் டாக் செயலியை இதுவரை சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர்பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வின் படி சென்ற ஆண்டில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆப் டிக் டாக் ஆப் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, கல்லூரி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இந்தியாவில் டிக் டாக் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தவறான வழியில் செல்லுவதற்கு வழிவகுக்கிறது என்றும், தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் டிகடாக்கில் தங்கள் நடப்புத் திறமைகளை வெளிப்படுத்தி வீடியோ பதிவிட்ட 28 குடும்ப பெண்களின் வீடியோக்கள் ஆபாச இணையதளத்தில் பகிரப்பட்ட சம்பவத்தால், பெண்கள் கலக்கத்தில் உள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்டத்தில் மட்டும் 28குடும்பப் பெண்களின் டிக்டாக் வீடியோக்களை சமூக விரோதிகள் ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதையறிந்த சம்பந்தப்பட்ட பெண்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து காவல்துறையினரை அணுகி ஆபாச இணையதளங்களில் இருந்து அந்த வீடியோவை மட்டும் நீக்க நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்து வருகின்றனர்.

குறிப்பாக கடந்த சில தினங்களில் மட்டும் 28 பேர் டிக்டாகக் வீடியோக்களை நீக்கக் கோரி புகார் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புகார் கொடுத்தவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில் ஆபாச இணையதளங்களில் அந்த வீடியோக்கள் நீக்கப்படுவதற்கு இன்னும் சில தினங்கள் ஆகும் என்பதால் டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு பொழுதைக் கழித்தவர்கள் பெருங்கவலையில் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக சிலர் பெண்களின் புகைப்படங்கள் கிடைத்தாலே ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பிவிடும் இந்த காலத்தில், அவர்களுக்கு ஏற்ற முகபாவத்துடன் ஆடிப் பாடி வீடியோ வெளியிட்டால் என்னமாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சான்று, எனவே டிக்டாக் வீடியோ பதிவிடும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத வீடியோக்களை வெளயிட்டால் கண்டிப்பாக வீபரிதங்கள் ஏற்படும்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*