பிளிப்கார்ட் மற்றும் அமேசான் சேல்ஸ் பெயரில் மோசடி சிக்கிக்கொள்ளாதீர்கள்!

ஈ-காமர்ஸ் போர்ட்டல்களில் பண்டிகை கால சிறப்பு விற்பனைகள் துவங்கியுள்ளது. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய தளங்களில் இன்று முதல் துவங்கி அக்டோபர் 4 வரை நடைபெறுகிறது. இலாபகரமான தள்ளுபடியை பண்டிகை காலங்களில், பயனர்களுக்கு பிடித்த தயாரிப்புகளை வாங்குவதற்கான பல தள்ளுபடிகள் மற்றும் கேஷ் பேக் சலுகைகளை இந்நிறுவனங்கள் வழங்குகிறது.

இந்த மாதிரியான பண்டிகை கால விற்பனையின் போது தான் பயனர்கள் ஸ்பேம் மற்றும் ஆன்லைன் கொள்ளையர்களிடம் மாட்டிக்கொள்கின்றனர். என்ன மாதிரியான வலைகளில் ஆன்லைன் கொள்ளையர்கள் பயனர்களுக்கு தெரியாமல் சிக்க வைக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

ஆன்லைனில் நீங்கள் வாங்கிய பொருளிற்கு குழுக்கள் முறையில் கார் அல்லது நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான ரொக்கப் பரிசு கிடைத்துள்ளதாக நிர்வாக அதிகாரிபோல் போன் கால் செய்வார்கள். பரிசை செயலாக்குவதற்காக உங்களிடம் பதிவு கட்டணத்தை செலுத்துமாறு கேட்பார்கள். எனவே, பரிசுக்கு பணம் செலுத்தும்படி கேட்கும் மோசடி கும்பளிடமிருந்து விலகி இருங்கள்.

மோசடி செய்பவர்களுக்கு வாட்ஸ் ஆப் புதியதல்ல. மற்றவர்களை ஏமாற்ற விரும்பும் பலர் போலி செய்திகளை பரப்புவதற்கு வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துகின்றனர். ஸ்கேமர்கள் லாபகரமானதாக இருக்கும் பிரபலமான தயாரிப்புகளுக்கான தள்ளுபடிகள் பற்றிய செய்திகளை அனுப்பி உங்களை ஃபிஷிங் வலையில் சிக்க செய்து, உங்கள் ஆன்லைன் வங்கி சான்றுகளை சேகரித்து பணத்தை திருடிவிடுவார்கள் எச்சரிக்கை.

சில ஆண்டுகளுக்கு முன்பு, கூப்பன் குறியீடுகளை மக்கள் வலைத்தளங்களில் அதிகம் தேடி வந்தனர். பல கவர்ச்சிகரமான தள்ளுபடியைப் பெற இந்த கூப்பன் கோடுகள் பயன்படுத்தப்பட்டன. இருப்பினும், இணையத்தில் கூப்பன்களைத் தேடும்போது ஃபிஷிங் வலையில் சிக்கிக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

கிரெடிட் கார்டுகளை வழங்குவதாகக் கூறி சீரற்ற எண்களிலிருந்து அழைப்புகளைப் பெறலாம் அல்லது உங்கள் தற்போதைய கிரெடிட் கார்டின் வரம்பை மேம்படுத்தலாம் என்றும் உங்களுடைய தற்போதைய அட்டை தடுக்கப்பட்டுள்ளது என்றும் பொய் சொல்லி, உங்களுடைய கார்டு விபரங்களை அறிந்துகொள்ள முயற்சிக்கலாம். உஷாராக இருங்கள்.

ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்பொழுது மோசடி வலைத்தளங்களுக்கு நீங்கள் திருப்பி விடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே, நீங்கள் எந்தவொரு பொருளையும் வாங்குவதற்கு முன் வலைத்தளத்தின் URL ஐ சரிபார்க்கவும். போலி வலைத்தளங்களில் சிக்கி உங்கள் விபரங்களை எளிதாக ஃபிஷிங்கிற்கு வழங்காதீர்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*