நாகர்கோவிலில் மீன்வள மசோதா- 2019 குறித்த கருத்து கேட்பு கூட்டம்

மீன்வள மசோதா- 2019 குறித்த கருத்து கேட்பு கூட்டம் 26-2-2020 புதன்கிழமை காலை 11 மணிக்கு நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள லக்ஷ்மன் மகாலில் வைத்து நடைபெற்றது .

மாவட்ட ஆட்சியர்  தலைமையில் நடைபெற்ற இக் கருத்து கேட்பு கூட்டத்தில் மீன்வள துறை மாவட்ட இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் ஆகியோர் ஆட்சியருடன் உடன் இருந்தனர் . கருத்து கேட்பு கூட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான மீனவ பிரதிநிதிகள் , தலைமைகள் ,  அமைப்புகளின் பொறுப்பாளர்கள் , எழுத்தாளர்கள் , சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் .

மீனவ மக்களை ஒடுக்கும் மீன்வள மசோதாவுக்கு எதிராக கூட்டத்தில் கலந்து கொண்டோர் தங்கள்  கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் . அவை அனைத்தையும் பதிவு செய்த மாவட்ட ஆட்சியர் அனைத்து கருத்துக்களையும் அரசின் கவனத்திற்கு கொண்டு சேர்ப்பேன் என உறுதி அளித்தார் . பின்னர் மீன்வள மசோதா 2019 ஐ கைவிட கோரி அனைவரும் தங்கள்  மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர் . மீன்வள மசோதாவுக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக குமரி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டனர் இதனால் தேங்காய்பட்டணம் மற்றும் குளளசல் போன்ற மீன்பிடி துறை முகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது .

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*