தூத்தூர் புனித யூதாக் கல்லூரி தமிழ்துறை நடத்தும் 5 நாள் இணையவழி பன்னாட்டு கருத்தரங்கம்

குமரி மாவட்ட நெய்தல் நில மக்களின் வாழ்வியல் எனும் தலைப்பில் புனித யூதா கல்லூரி தமிழ்த்துறை நடத்தும் ஐந்து நாள் தொடர் இணையவழி பன்னாட்டு  கருத்தரங்கம் வருகிற
22/06/2020  முதல்  26/06/2020 வரை 5 நாட்கள்  நடைபெற உள்ளது. பேராசிரியர்கள், மாணவர்கள் , உள்நாடு – வெளிநாடு வாழ் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம் .

கன்னியாகுமரி மாவட்டம் குறிஞ்சி,முல்லை,மருதம், நெய்தல் என நான்கு நிலங்களையும் தன்னகத்தே கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் வரலாற்று சிறப்புடைய மாவட்டமாகும்.இம் மாவட்டத்தின் மேற்குக் கடற்கரையோர மீனவர் கிராமத்தில் புனித யூதாக் கல்லூரி அமைந்நதுள்ளது.

கல்லூரியின் 40-வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு,தமிழ்த்துறை ஐந்துநாள் தொடர் இணைய வழி பன்னாட்டு கருத்தரங்கினை நடத்துகின்றனர். ஐந்து நாள் தொடர் கருத்தரங்கில் பேராசிரியர்கள், மாணவர்கள் , உள்நாடு – வெளிநாடு வாழ் தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இப்பன்னாட்டு கருத்தரங்கில் இணைய பதிவு படிவத்தினை நிரப்பி 21/06/2020 -க்குள் சமர்பிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்ச்சியின் இணைப்பு , பின்னோட்ட படிவம் (feedback) உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் புலன குழுவின் (whatsapp group ) வழி அனுப்பி வைக்கப்படும். வெளிநாடு வாழ் சகோதரர்கள் கலந்துக்கொண்டு பயன் பெறும் வகையில் ஒவ்வொரு நாளும் இந்திய  நேரப்படி வைகறை 5.55 முதல் யாமம் 12.12 கருத்தரங்க உரை இணைப்பில் இருக்கும். எந்நேரமும் பார்க்க வேண்டுமென்றால். வலையாெளியில் (youtube) குழு சேர்த்து (subscribe) , மணி பொத்தானையும் (bell button) அழுத்தி இணைய வேண்டும்.

கருத்தரங்கம் 22/6/2020 திங்கள் முதல்  தொடர்ந்து 26/06/2020 வெள்ளி அன்று முடிவடையும். அன்று மின் சான்றிதழுக்கான தனி படிவம் அனுப்பப்படும். அதனை நிரப்பி  அனுப்பினால் உங்கள் மின்னஞ்சலில் மின் சான்றிதழ் வந்து சேர்ந்தது விடும்.

வலையொளி பதிவிற்கு உரலியை (link)  அழுத்திய பின் மணி பொத்தானையும் அழுத்தவும்.
    https://m.youtube.com/channel/UCguzHfZhvxQ1RI3wYi0ubFw

உங்கள் புலன இணைப்பில் இணைந்துள்ள தமிழ் ஆர்வலர்களுக்கும் இப்படிவத்தை பகிர்ந்து பயன்பெற செய்யுங்கள். புலன குழுவில் இணைய கீழே உள்ள ஏதேனும் ஒரு உரலியை (link) அழுத்தவும்

புனித யூதா கல்லூரி – 1 (https://chat.whatsapp.com/LoNFchTVbLRJHZ2QzJIKyT)

புனித யூதா கல்லூரி – 2 (https://chat.whatsapp.com/DBubkRmtnT83WkP32GpCYX)

புனித யூதா கல்லூரி – 3 (https://chat.whatsapp.com/GJNT0xY14D6IdTS0CI3LiP)

புனித யூதா கல்லூரி – 4 (https://chat.whatsapp.com/BXPug9t4uR87FdOtlNvdMb)

புனித யூதா கல்லூரி – 5 (https://chat.whatsapp.com/BzdbqKLu1J1Ktd4z3qoLyE)

சான்றிதழ் கிடைத்ததும் புலன குழுவிலிருந்து விடை பெற்று செல்ல வேண்டும்.

பதிவு படிவம் பெற கீழேயுள்ள உரலியை (link) அழுத்தவும்.
    https://forms.gle/BbDyGHiXk9HMLUSC7

         
கருத்தரங்கு ஏற்பாடுகளை புனித யூதாக்கல்லூரி முதல்வர்
முனைவர் சி.ஹென்றி
அவர்களும் , கருத்தரங்கு  ஒருங்கிணைப்பாளர்
தமிழ்த்துறை தலைவர்
முனைவர் எம்.மேரி அவர்களும் (புலன எண்: 938 419 5470) இணை ஒருங்கிணைப்பாளர்களான பேரா.கி.சூசை அருள், பேரா.ஜோஸ்  இ சுபின்,  பேரா.ஜா.சஜிகுமார் ஆகியோர் செய்து வருகின்றனர் .

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*