இணையவழி பன்னாட்டு கருத்தரங்கு – தூத்தூர் புனித யூதாக் கல்லூரி

குமரி மாவட்ட நெய்தல் நில மக்களின் வாழ்வியல் எனும் தலைப்பை மையமாக கொண்டு  தூத்தூர் புனித யூதா கல்லூரி தமிழ்த்துறை நடத்தும் ஐந்து நாள் தொடர் இணையவழி பன்னாட்டு  கருத்தரங்கம் 22/06/2020  முதல்  26/06/2020 வரை 5 நாட்கள்  நடைபெற உள்ளது.

கல்லூரியின் 40-வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு,தமிழ்த்துறை இந்த ஐந்துநாள் தொடர் இணைய வழி பன்னாட்டு கருத்தரங்கினை நடத்துகின்றனர்.

இம்மாதம் 22 ம் தேதி முதல் நாள் நெய்தல் நில மக்களின் சமய பழக்க வழக்கங்கள் எனும் தலைப்பில் அருட்பணி அ . கில்டஸ் அவர்களும் , 23 ம் தேதி இரண்டாம் நாள் நெய்தல் நில மக்களின் வரலாறு மற்றும் பண்பாடு எனும் தலைப்பில் முனைவர் அ .சஜின் அவர்களும் , 24 ம் தேதி மூன்றாம் நாள் நெய்தல் நில மக்களின் கல்வி மற்றும் விளையாட்டு குறித்து பேரா . சஜி குமார் அவர்களும் , 25 ம் தேதி நான்காம் நாள் நெய்தல் நில மக்களின் பொருளாதாரம் குறித்து  முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அவர்களும் , 26 ம் தேதி ஐந்தாம் நாள் நெய்தல் நில மக்களின் இன்றைய வளர்சி குறித்து எழுத்தாளர் சகாய ஜூடி அவர்களும் உரை நிகழ்த்துகின்றன்னர் .

பேராசிரியர்கள், மாணவர்கள், உள்நாடு – வெளிநாடு வாழ் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம் .

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*