துறைமுகத்தில் தொடரும் உயிர்பலிகள் . அரசு நடவடிக்கை எடுக்குமா ?

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் இரையுமன்துறை மீன்பிடி துறைமுகம் போதிய ஆய்வு மற்றும் திட்டமிடல் செய்யாமல் கட்டப்பட்டுள்ளது. எனவே துறைமுகத்துக்குள் அலை அடிக்கும் அவல நிலையில் உள்ளது . பொதுவாக ஆனி ஆடி காலங்களில் எழும் ராட்சத அலையில் சிக்குண்டு மீனவர்கள் பலியாவது வழக்கம் . துறைமுகம் வந்ததால் இந்த பிரச்சனை இன்றி மீனவர்கள் துறைமுகம் வழியாக எளிதில் செல்ல வேண்டும் ஆனால் தேங்காய் பட்டணம் துறைமுகத்துக்குள் அலை அடிக்கும் அவல நிலை உள்ளது .இந்த அலையில் சிக்கி மீன்வர்கள் தொடர்ந்து  உயிரிழப்பது மிகவும் கவலைக்குரியது .

இரண்டு மீனவர்கள் மாயம்

இந்நிலையில் நேற்றுமுன்தினம் (23-7-2020) காலையில்  நாட்டுப்படகில் மகனுடன் மீன் பிடிக்க சென்றபோது முள்ளூர்துறையை சார்ந்த ஆன்றணி (வயது 65) என்பவர் அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததில் மாயமானார் . அதே போன்று நேற்று (24-7-2020) மாலை நாட்டுபடகில் கரை திரும்பியபோது துறைமுக ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததில் கொல்லங்கோடு பகுதியை சார்ந்து ஷிபு (வயது 24) மாயமானார் . இந்த தொடர் சம்பவங்கள் மீனவர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . துறைமுகம் முறையாக கட்டப்படவில்லை என்பது  மட்டுமின்றி ஆழப்படுத்துதல் போதிய பராமரிப்பு பணிகளும் செய்யப்படுவதில்லை .
தொடரும் மீனவர் பலிகளை தடுக்க விரைந்து , அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*