தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் கருப்பு கொடி ஏந்திய போராட்டம் .

தேங்காய்பட்டணம் துறைமுகத்தின் உட்புறமாக  பரக்காணி பகுதியில் தடுப்பணை கட்டுமானம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடல் மணல் துறைமுகத்தில் நிரம்பி வருகிறது. இதனால் கடலுக்கு சென்று மீன் பிடித்து கரைக்கு திரும்பும் நாட்டுப்படகு மீனவர்கள் கரை திரும்பும் வேளையில் படகு நிலைகுலைந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாவது வாடிக்கையாகி வருகிறது.

எனவே பரக்காணி பகுதியில் கட்டுத்தொடங்கியிருக்கும் தடுப்பணையை நிரந்தரமாக மூடக்கோரி அனைத்து மீனவர்களும் முக கவசம் அணிந்து, கையில்  கறுப்புக்கொடி ஏந்தி ,சமூக  இடைவெளியை பாதுகாத்து ஊர்வலத்தில் பெரும் திரளாக கலந்து கொண்டனர்

இந்திய நாட்டிற்கு அந்நிய செலாவணியை அதிகளவில் ஈட்டித்தரும் மீனவர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை பாதித்து ,மீனவர்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் அணையை நிரந்தரமாக மூடக்கோரி இன்று அதிக அளவில் மீனவர்கள் போராட்டத்தில் களமிறங்கினர் .

மத்திய மாநில அரசுகள் உடனடியாக இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று போராட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*