வாழ்த்து மடல்

இந்தியா – தமிழ்நாடு – கேரளா எல்லையில் அமைந்துள்ள கடற்கரை கிராமம் தூத்தூர். ஆதித்தமிழர்கள் வாழ்ந்த குமரிக்கண்டத்தின் எஞ்சிய பகுதி. கடலின் பெருவெள்ளத்தில் அதிகம் பாதிக்கும் மீனவ கிராமம்.

நமது கிருஷ்ணகிரியில் இருந்து சுமார் 608.9 கி. மீ. தொலைவில் (NH-44) அமைந்துள்ளது. 10 மணி நேரம் 36 நிமிடங்கள் பயனம் செல்லும் கடற்கரை கிராமம். இக்கடற்கரை கிராமத்தில் படித்து பட்டம் பெற்று ஆசிரியர் எனும் சமூக பணி செய்து வரும் திருமதி. லூயிஸ்மேரி அவர்கள் தன்னலம் பாராது உழைக்கும் ஆசிரியை, கோரனா விடுமுறை நாட்களிலும் பள்ளிக்கு வந்து தோட்டத்திற்கு தண்ணீர் விடுதல், பூந்தொட்டிகள் அமைத்தல் மற்றும் தனது கடற்கரை கிராமம் தூத்தூரில் செயல்படும் தன்னார்வ அமைப்பு எம். எம். குழுமத்துடன் இணைந்து ரூபாய். 20,000 /- செலவு செய்து சுவற்றில் விழிப்புணர்வு ஓவியம் மற்றும் வண்ணம் தீட்டுதல் பணிக்கு நன்கொடையளித்துள்ளனர். இவர்களின் சேவையை நமது பள்ளியின் இருபால் ஆசிரியர்கள்,அலுவலக பணியாளர்கள், மாணவிகள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்.
செல்வி. தா. வளர்மதி.
தலைமை ஆசிரியை.
அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி,
காவேரிப்பட்டினம்.
கிருஷ்ணகிரி. (மா )

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*