தூத்தூர் ஊராட்சியில் கிராம நூலகம் அமைத்துத்தர கோரி ஊராட்சி தலைவியிடம் மனு

அரசு மக்கள் புத்தகங்களை வாசித்து பயன்பெற நூலகங்களை நிறுவி வருகிறது . இதற்காக மக்களிடம் வரியும் வசூலித்து வருகிறது . இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும் தூத்தூர் ஊராட்சியில் அரசு சார்பில் நூலகமே கிடையாது . எனவே
தூத்தூர் ஊராட்சியில் ‘அரசு கிராம நூலகம்’ அமைத்து தரக்கோரி தூத்தூர் ஊராட்சி தலைவி திருமதி லைலா அவர்களிடம் கடற்கரை இலக்கிய வட்டம் சார்பில் மனு வழங்கப் பட்டது . கடற்கரை இலக்கிய வட்டம் சார்பில்  எழுத்தாளர்கள் செராக் நெற்றோ, விஜய் சேசுலா  , இரையுமன் சாகர் , போபின் ஆகியோர் மனுவை வழங்கி நூலகம் அமைக்க வேன்டிய தேவை குறித்த கருத்துகளை  முன் வைத்தனர் .

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*