மிஸ்டர் ஏசியா வில் வெள்ளி பதக்கம் வென்ற குமரி (சின்னத்துறை) இளைஞர்

சிங்கப்பூரில் வேல்டு பிட்னஸ் பெடரேஷன்  நடத்திய  மிஸ்டர் ஏசியா ஆண் அழகன் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை மீனவ கிராமத்தை சார்ந்த திரு.  டிஜோய் எஸ்பின் வெள்ளி பதக்கம் (இரண்டாம் இடம் ) வென்றுள்ளார். இவரது தந்தை பெயர் எஸ்பின்,  தாய் பெயர் மேபிள்.  இவர் இப்போட்டியில் பங்கு பெறுவதற்காக சென்னையில் நடைபெற்ற தகுதி போட்டியில் ஜுனியர் பிரிவில் முதல் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவரது வெற்றியால்  சின்னத்துறை புனித யூதா படிப்பக உறுப்பினர்கள் மற்றும் ஊர் மக்கள்  மட்டுமின்றி தூத்தூர் பகுதியே பெரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் காணப்படுகின்றது.

இந்த வெற்றியின் மூலம்,  தங்கள் திறமையால் குமரிக்கும்,  தமிழகத்துக்கும் பெருமை சேர்க்கும் தூத்தூர் பகுதி சாதனையாளர்களில் ஒருவராய் மாறி இருக்கிறார் சின்னத்துறை டிஜோய் எஸ்பின்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*