இந்தியன் ஐ லீக் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சிட்டி எப் சி அணி

இந்தியாவின் மிக உயரிய கால்பந்து போட்டி இந்தியன் ஐ லீக். தற்போது நடந்து முடிந்த Indian I League (2018-2019) போட்டியில் Chennai city FC  அணி வெற்றிவாகை சூடி சாம்பியன் பட்டத்தை  வென்றுள்ளது.  இந்த அணியின் வெற்றிக்கு உதவியவர்கள் நம் தூத்தூர் மண்டல கால்பந்து வீரர்கள் என்பதில் நம் அனைவருக்கும் பெருமை.  குறிப்பாக சாம்பியன் பட்டம் வென்ற அணியின் கேப்டன் திரு Micheal Regin  (இரவிப் புத்தன்துறை) என்பதில் பெருமிதம் அடைகிறோம். அதேபோல்  திரு Rajeevan Susai, திரு. Pravitto Raju திரு Shem Marton திரு Shine John ஆகியோரும் தங்கள் திறமையை நிரூபித்து நமக்கு மட்டுமின்றி தமிழகத்துக்கே பெருமை சேர்த்து உள்ளனர். இந்த வெற்றி தென் இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

இது மட்டுமின்றி தற்போது நடந்து முடிந்த HERO CUP 2019 லும் பெங்களூர் அணி உட்பட,  இரண்டு ISL அணிகளை வீழ்த்தி அரை இறுதி போட்டிக்கு நுழைந்துள்ளது சென்னை சிட்டி எப் சி அணி.  அரை இறுதியில் நுழைந்தது கூட பெரிய  சாதனையே ஆகும். இந்த வெற்றியும் தென்னக அளவில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

மாபெரும் சாதனை புரிந்துள்ள Chennai City FC அணியின் அத்தனை வீரர்களும் 
எதிர் வரும் நாட்களில் மேலும் பல சாதனைகளை நிகழ்த்தட்டும்.  

நம் பகுதி வீரர்கள் தொடர்ந்து தேசிய அளவில் நிகழ்த்தும்  வெற்றிகளை காணும் போது,  உலக கால்பந்து போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாடும் நாள் வெகு தூரம் இல்லை என்பதை உணர்த்துகிறது

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*