குமரியில் கடல் சீற்றம். ஊருக்குள் கடல் நீர் புகுந்து வீடுகள் சேதம் மக்கள் அவதி

 

ஃபனி புயல் எச்சரிக்கை விடப்பட்டு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. 
சூறையாடிவிட்டு சென்ற கஜா புயலைவிட தற்போது உருவாகியுள்ள ஃபனி புயலின் வேகம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது வலுவடைந்து கொண்டே வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை 36 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளளது. 

இந்த புதிய புயலுக்கு ஃ பனி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் பெரும்பாலும் சென்னை அருகே கரையை கடக்கும் . அவ்வாறு கரையை கடக்கும்போது 150 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கஜா புயலை விட ஃபனி புயலின் வேகம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந் நிலையில் குமரியில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது.  இரவிப்புத்தன்துறை வள்ளவிளை இடையில் எடப்பாடு பகுதியில் போடப்பட்ட தற்காலிக சாலை நாசமாகி உள்ளது.  எனவே போக்குவரத்து மீண்டும் பாதிப்பு அடைந்துள்ளது.  

வள்ளவிளை பகுதியில் கடல் நீர் ஊருக்குள் புகுந்து வீடுகள் சரிந்து விழுந்துள்ளது.  இதுபோல கடியப் பட்டணம் மற்றும் இதர கிராமங்களிலும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*