குமரி மீனவர் விசைப்படகு மும்பை கடல் பகுதியில் மூழ்கும் அபாயம்

குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறை சார்ந்த கெனிவர் என்பவருடைய பெயரில் பதிவு செய்யப்பட்ட லோட் ஆஃப் ஒஸ்ஸன் IND-TN 15-MM 5338 என்ற விசைப்படகு இரவிபுத்தன்துறை சார்ந்த வர்க்கீஸ் என்பவருக்கு சொந்தமானது. குஜராத் கடல் பகுதியில் ஏற்பட்ட புயலில் மும்பை மீன்பிடி துறைமுகத்தில் கரை சேர்ந்த மீனவரகள் 3 வாரங்களுகுபின்13-11-2019 அன்று இரவிபுதன்துறை சார்ந்த லீஜோ, பூத்துறை சார்ந்த கிறிஸ்பின் மற்றும் கேரளா மாநிலம் அடிமலதுறை சார்ந்த பீட்டர், ஆண்டனி, சிலுவையன், விஜயன் அஞ்சுதெங்கை சார்ந்த சாபு, முத்தப்பன், ரஞ்சித், லியோ மற்றும் அசாம் மாநிலத்தை சார்ந்த இரு மீனவர்கள் உட்பட 12 மீனவர்கள் இம்மாதம் 13-ஆம் தேதி மும்பை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றார்கள் இம்மாதம் 14ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் மீன்பிடிக்க சென்று கொண்டிருந்த வேளையிலே அவ்வழியாக வந்த மும்பை பகுதியை சார்ந்த ஒரு விசைப்படகு குமரி மீனவரின் விசைப்படகை நேரில் மோதி சேதப்படுத்தியது. விசைப்படகு கடலுக்குள் ஆழ் கடலில் மூழ்கும் நிலையில் உயிர்காக்க வேண்டி போராடிய 12 மீனவர்களையும் அவ்வழியாக வந்த இரவிபுத்தன்துறை சார்ந்த மாதா என்ற விசைப்படகு மீட்டு அவர்களை பாதுகாப்பாக வைத்துள்ளார்கள். மேலும் கடலில் மூழ்கும் விசைப்படகை மாதா விசைப்படகு, இரவிபுத்தன்துறை சார்ந்த மேரி மாதா, மரியா விசைப்படகுகள் இணைந்து குஜராத் மாநிலம் வெறவல் என்ற மீன்பிடி துறைமுகத்துக்கு கரை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

மீனவர் தொடர்பு எண்: 8903473518
பணி. சர்ச்சில்,
IVD பொதுச்செயலாளர்,
தெற்காசிய மீனவர் தோழமை

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*