புயலைக் கிளப்பும் ஒக்கிப் புயல் விவாதங்கள் – மூன்றாம் பதிப்பு வெளியீடு

நெய்தல் நில மக்களின் கதைகளை உலகறியச் செய்வதற்கு வழக்குரைஞர் லிங்கன் பெரும் பங்களிப்பு செய்து வருகிறார். டிசம்பர் 14 அன்று சென்னை பெரியார் திடலில் முழுநாள் நிகழ்வாக “நெய்தல் இலக்கியத் திருவிழா”வை நடத்தினார். “புயலைக் கிளப்பும் ஒக்கிப் புயல் விவாதங்கள்” என்னும் அவரது நூல் மூன்றாம் பதிப்பாக வெளி வந்துள்ளது. சனிக்கிழமையன்று (ஜனவரி 11, 2020) சென்னைப் புத்தகச் சந்தையில் இந்த நூலின் அறிமுக உரையாடல் நடந்தது. தேசிய மீனவர் பேரவையின் முன்னணித் தலைவர் முனைவர் விவேகானந்தன் மீனவச் சொந்தங்களின் கதையாடல்களைக் கவனப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி விளக்கிப் பேசினார். காங்கிரஸ் மகளிரணி மாநிலச் செயலாளர் லட்சுமி ராமச்சந்திரன் மக்களிடம் உரையாடுவதிலிருந்து கொள்கைகளை  வடிவமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார். தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநிலச் செயலாளர் மஞ்சுளா, மீனவப் பெண்களின் உணர்வுகளை சமவெளிப் பெண்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். மீனவர்களின் அரசியல் தலைமை எழுச்சி பெற வேண்டுமென்று லிங்கன் பேசினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*