ஈரானிலிருந்து 700 மீனவர்கள் 21ம் தேதி தூத்துக்குடி வருகை: ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்!!

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு மாலத்தீவில் இருந்து இந்திய கடற்படையை சேர்ந்த ஐ.என்.எஸ். ஜலஸ்வா  கப்பல் மூலம் வருகை தந்த தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 700 நபர்களை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகத் தலைவர் டி.கே.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  ஆகியோர் வரவேற்று சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆபரேசன் சமுத்திரா சேது திட்டத்தின் கீழ் ஏற்கனவே இலங்கை நாட்டில் இருந்து 686 நபர்கள் கடந்த 02.06.2020 அன்று வருகை தந்தார்கள்.  அனைவருக்கும் முழுமையாக பரிசோதனை செய்ததில், திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த ஒரு நபர்க்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியானது.

மேலும், இந்திய கடற்படை ஐ.என்.எஸ். ஜலஸ்வா  கப்பல் மாலத்தீவில் இருந்து 2 தினங்களுக்கு முன்பு 700 நபர்களைகளுடன் புறப்பட்டு இன்று 07.06.2020 தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு வந்தது. இது நமது மாவட்டத்திற்க்கு வருகை தந்த இரண்டாவது கப்பல் ஆகும். இந்த கப்பலில் தமிழகத்தை சார்ந்த 509 நபர்களும், பிற மாநிலங்களை சார்ந்த சுமார் 200 நபர்களும் வருகை தந்தார்கள். வருகை தந்த வெளிமாநில பயணிகளுக்கு கொரானா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தபடுவார்கள். பின்னர் மீண்டும் 7 நாட்கள் பிறகு பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் கொரோனா தொற்று இல்லாதவர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இன்று கப்பல் மூலம் வந்த பயணிகள் இறங்கியதுடன் பயணிகளுக்கு உடனடியாக தெர்மல் ஸ்கிரினிங் செய்யப்பட்டது. நோய்கள் இல்லாத நபர்களுக்கு குடிவரவு நுழைவு மற்றும் உடைமைகளை சோதனைகளை செய்து மாவட்டம் வாரியாக பிரித்து 25 பேருந்துகளில் அவர்களது மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க்பபட்டுள்ளது. பயணிகள் வருகையை முன்னிட்டு ஏற்கனவே அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பயணிகளின் விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பயணிகள் அவர்களது மாவட்டங்களுக்கு சென்று அடைந்தவுடன், அரசு தெரிவித்தள்ள விதிகளின்படி கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப் படுத்தப்படுகிறார்கள். பரிசோதனை முடிவில் கொரோனா இல்லாத நபர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

நமது மாவட்டத்தை சார்ந்த 50 பயணிகளும், கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த 160 பயணிகளும், ஆந்திரா, பீகார், உத்திரபிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சார்ந்த நபர்களும் இந்த கப்பலின் மூலம் இன்று வருகை தந்தார்கள். கப்பல் மூலம் வருகை தந்த பயணிகளுக்கு அனைவருக்கும் காலை உணவு, மதிய உணவு, தேவையான குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வருவாய்த்துறை, சுங்கத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழகத்தின் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் ஈரான் நாட்டில் இருந்து வருகிற 21.06.2020 அன்று சுமார் 700 மீனவர்கள் நமது மாவட்டத்திற்க்கு வருகை தர உள்ளார்கள். அதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*