31 .7 .20 20 அன்று நீரோடி முதல் பழவேற்காடு கடற்கரை கிராமங்களில் கறுப்புக் கொடி போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் பரக் காணியில் தடுப்பணை கட்டும் முயற்சி நடைபெற்று வருகிறது.

அந்த பகுதியில் தடுப்பணை கட்டுவதால் துறைமுகத்தில் மணல் திட்டுகள் அதிகமாகி கடலிலிருந்து வருகின்ற வர்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும்.

தற்போது 2 பேர் இதே பகுதியில் மணல்திட்டு காரணமாக தங்களது படகு கவிழ்ந்து இறந்துவிட்டனர் .இந்நிலை நீடிக்காமல் இருக்கவும், கடல்நீரில் நல்ல தண்ணீர் வரும் போதுதான் கடல்வளம் பெருகும் கடல் வளம் பெருகினால் இந்தியாவின் அன்னியச் செலாவணி அதிக அளவில் கிடைக்கும், பொருளாதாரம் அதிகரிக்கும் இப்பொழுது தடுப்பணை கட்டுகின்ற பகுதியில் அவ்வப்போது மழை பெய்தாலும், பேச்சிப்பாறை அணை திறந்து விட்டாலும் நிலம் சார்ந்த மக்களின் அந்த இடம் மூழ்கும் அபாயம் இருந்து வருகின்றது.

எப்போதெல்லாம் தண்ணீர்ப் பெருக்கு அந்த இடத்தில் வருகின்றதோ, அப்போதெல்லாம் கடல்சார் மக்கள் அந்த நிலம்சார் மக்களை காப்பாற்றுவது வழக்கமாகியுள்ளது.

இந்நிலையில் தடுப்பணை அந்தப் பகுதியின் கட்டினால் நிலம்சார் மக்களின் வீடுகள் அழியும் அபாயம் உள்ளது.

எனவே கடல் மற்றும் நிலம் சார் மக்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு, தடுப்பணையை உடனடியாகப் நிறுத்தக்கோரி ,31 .7 .20 20 அன்று நீரோடி முதல் பழவேற்காடு கடற்கரை கிராமங்களில் உள்ள அத்தனை பேரும் தங்கள் ஊர்களிலும், தங்கள் படகுகளில் கறுப்புக் கொடி கட்டும் போராட்டத்தை நடத்த உள்ளார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*