Short News

மிஸ்டர் ஏசியா வில் வெள்ளி பதக்கம் வென்ற குமரி (சின்னத்துறை) இளைஞர்

சிங்கப்பூரில் வேல்டு பிட்னஸ் பெடரேஷன்  நடத்திய  மிஸ்டர் ஏசியா ஆண் அழகன் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை மீனவ கிராமத்தை சார்ந்த திரு.  டிஜோய் எஸ்பின் வெள்ளி பதக்கம் (இரண்டாம் இடம் ) வென்றுள்ளார். இவரது தந்தை பெயர் எஸ்பின்,  தாய் பெயர் மேபிள்.  இவர் இப்போட்டியில் பங்கு […]

Fr Justin Alex
Short News

அனுக்கிரக பவன் தியான இல்லத்தின் இயக்குனர் அருட்பணி. ஜஸ்ட்டின் அலெக்ஸ் காலமானார்

திருவனந்தபுரம் லத்தீன் உயர் மறைமாவட்டத்தை சார்ந்த மேனம்குளத்தில்  அனுக்கிரக பவன் தியான இல்லம் நடைபெற்று வருகிறது.  தியான இல்லத்தின் இயக்குனர் அருட்பணி.  ஜஸ்ட்டின் அலெக்ஸ் அவர்கள் இன்று (14-03-2019) காலமானார். இவருக்கு வயது 68. தூத்தூர் மறைவட்டத்திற்கு உட்பட்ட வள்ளவிளை மீனவ கிராமம் இவரது சொந்த ஊர் என்பது […]

Short News

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பாடதிட்டத்தில் ‘கடல் நீர் நடுவே’ நாவல்

திருநெல்வேலி மாவட்டம், பாளையன்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் முதல் வருட மாணவ மாணவியருக்கான தமிழ் பாடத்தில்  நாவலாசிரியர் கடிகை அருள் ராஜ் அவர்கள் எழுதிய கடல் நீர் நடுவே நாவல் பாடமாக  வைத்திருக்கிறார்கள்.  நாவலாசிரியரை கவுரவித்தல், எழுத்தாளர் மாணவர்களிடயே கருத்து பகிர்வு எனும் வகையில் கல்லூரி தமிழ் துறையால்  […]

ஜாக்குலின் மேரி
Short News

மாவட்ட நீதிபதியிடம் விருது பெற்ற பெண் வழக்கறிஞர்

மார்ச் 8, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மூன்று நூல்கள் எழுதி இலக்கிய சேவை புரிந்ததை பாராட்டி வழக்கறிஞர் ஜாக்குலின் மேரி அவர்களுக்கு மாவட்ட நீதிபதி அவர்கள் விருது வழங்கி கவுரவித்துள்ளார். எழுத்தாளர் ஜாக்குலின் மேரி அவர்களுக்கு அண்மையில் அசோகமித்திரன் படைப்பூக்க விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

News

தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் திருநிலைப்படுத்தப்பட்டார்

கோட்டாறு மறைமாவட்டம், கீழமணக்குடி மண்ணின் மைந்தர் மேதகு டாக்டர் ஸ்டீபன் ஆன்றனி அவர்கள் 22.02.2019 அன்று தூத்துக்குடி மறைமாவட்ட ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

News

இனயம் புத்தன்துறையில் புதிய விளையாட்டு மைதானம்

25.02.2019 அன்று இனயம் புத்தன்துறையில் புதிய விளையாட்டு மைதானதமானது பங்குதந்தை மற்றும் பங்குப்பேரவை உறுப்பினர்களால் திறந்து வைக்கப்பட்டது.

ஓயாத மீனவ துயர் நூல் வெளியீட்டு விழா
Short News

ஓயாத மீனவ துயர் நூல் வெளியீட்டு விழா

வருகிற மார்ச் 2 ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இரையுமன்துறை புனித லூசியாள் அரங்கில் வைத்து தூத்தூர் புனித யூதா கல்லூரி தமிழ்துறை உதவி பேராசிரியர் J. சஜி குமார் அவர்கள் எழுதிய ‘ஓயாத மீனவ துயர்’ நூல் வெளியிடப்படுகிறது.   அனைவரும் வருக

மாபெரும் திரைப்பட மெல்லிசை விருந்து
Short News

இனயம் புத்தன்துறை புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு மாபெரும் திரைப்பட மெல்லிசை விருந்து

கன்யாகுமரி மாவட்டம், இனயம் புத்தன்துறை, புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு 03/03/2019 அன்று மாபெரும் திரைப்பட மெல்லிசை விருந்து நடைப்பெறும்.

வாகனம் நிறுத்தும் இடத்தில் அமரவைத்து உணவு வழங்கியதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Short News

வாகனம் நிறுத்தும் இடத்தில் அமரவைத்து உணவு வழங்கியதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்தாக நெடுந்தீவு அருகே மண்டபம், மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 13 மீனவர்களை கைது செய்ததோடு, 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன் யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள், அவர்களை தங்க […]

Short News

அனைத்து கடலோர மாவட்ட மீனவர்களுக்கும் ஏன் டிரான்ஸ்பாண்டர் வழங்கக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடுத்துவது குறித்து சர்வதேச நீதிமன்றத்தை அனுக மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, மீனவர்சங்கத் தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு […]