வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்

சுங்கச்சாவடிகளிலை கடக்கும் போது சில தடங்களில் ஃபாஸ்ட் டேக் என்ற எழுதியிருப்பதை பார்த்திருப்போம். அந்த வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் நிற்காமல் செல்லும். பிற வழித்தடங்களில் செல்லும் வாகனங்கள் நின்று கட்டணம் செலுத்திய பிறகே பயணிக்கும். ஃபாஸ்ட் டேக் வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் மட்டும் ஏன் நிற்காமல் செல்கிறது என்ற கேள்வி மனதில் எழலாம்.

ஃபாஸ்ட் டேக் என்றால் என்ன
ஃபாஸ்ட் டேக் என்பது ஒரு கார்ட் ஆகும். இந்த கார்ட் முன்னதாகவே பணம் செலுத்தி பெறலாம். இந்த கார்ட்டை ஸ்டிக்கர் போல் கார் முன்புற கண்ணாடியில் ஒட்டிக்கொள்ளலாம். ஃபாஸ்ட் டேக் வழித்தடத்தில் தடுப்புக்கம்பிக்கு மேல் ஸ்கேன்னர் பொருத்தப்பட்டிருக்கும், இந்த வழித்தடத்தில் கார் செல்லும் போது, தடுப்புக்கம்பிக்கு மேல் உள்ள ஸ்கேன்னர் ஸ்கேன் கார் கண்ணாடியில் உள்ள ஸ்டிக்கரை உடனடியாக ஸ்கேன் செய்யும்.

ஸ்கேன் செய்யும் முறை
ஸ்கேன் செய்த சில விநாடிகளிலேயே மொத்தமாக செலுத்திய பணத்தில் இருந்து. அந்த சுங்கச்சாவடிக்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் டெபிட் செய்து கொள்ளும். அதன்பின் தடுப்புக்கம்பி தானாக ஓபனாகி விடும். இது அனைத்தும் வழக்கம்போல் தொழில்நுட்ப முறையில் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விடும்.

ஃபாஸ்ட் டேக் டிஜிட்டல் திட்டம் இயங்கும் முறை
சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் சோதனை அடிப்படையில் ஃபாஸ்ட் டேக் டிஜிட்டல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த ஃபாஸ்ட் டேக் வசதியானது RFID என்ற தொழில்நுட்பத்தில் மூலம் இயங்குகிறது. சுங்கச்சாவடிக்கு அருகே 20 முதல் 25 மீட்டருக்குள் வாகனங்கள் வரும்போது ரேடியோ அதிர்வெண் தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் ஃகாரில் ஒட்டியுள்ள ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்து விடும்.

டிசம்பர் 1-க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்
இந்த நிலையில் டிசம்பர் 1 ஆம் தேதிமுதல் ஃபாஸ்ட் டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், ஃபாஸ்ட் டேக் இல்லாமல் அந்த வழித்தடத்தில் பயணித்தால் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபாஸ்ட் டேக் வழித்தடம் பயன்படுத்தினால் இரட்டிப்பு கட்டணம்
ஃபாஸ்ட் டேக் இல்லாத வாகனங்கள் ரொக்கமாக கட்டணம் செலுத்துவதற்கு ஒரு வழித்தடத்திற்கு ஒரு நுழைவு வாயில் ஏற்படுத்தப்பட உள்ளது. சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் வசதியில்லாத வாகனங்கள் ஃபாஸ்ட்டேக் தடங்களில் பயணித்தால் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

தமிழகத்தில் ஃபாஸ்ட் டேக் பெற்ற வாகனங்கள்
தமிழகத்தில் கடந்த 17 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட கணக்கீட்டின்படி சுங்கச்சாவடிகளில் பயணித்த 6 லட்சத்து 11 ஆயிரம் வாகனங்களில். 1 லட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே ஃபாஸ்ட் டேக் வசதி பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

ஃபாஸ்ட் டேக் கார்ட் பெறும் முறை
ஃபாஸ்ட் டேக் கார்ட்டை நேரடியாக சுங்கச்சாவடிகளிலும் பெற்றுக் கொள்ளலாம் அல்லது ஆன்லைன் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். சில வங்கிகள் மூலம் ஃபாஸ்ட் கட்டணம் செலுத்தி ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, கரூர் வைசியா வங்கி, சிண்டிகேட் வங்கி, ஃபெடரல் பேங்க், சரஸ்வத் பேங்க், சவுத் இந்தியன் பேங்க், ஐடிஎஃப்சி வங்கி, எக்யூடாஸ் வங்கி, பே டீம் பணம் செலுத்தும் வங்கி, அமேசான் இந்தியா இணையதளம் ஆகியவைகளில் கட்டணம் செலுத்தி ஃபாஸ்ட் டேக் கார்ட் பெறலாம்.

முறையாக ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்
அமேசான் இந்தியா இணையதளத்திலும் கட்டணம் செலுத்தலாம். இந்த அனைத்து வங்கிகளிலும் பணம் செலுத்துவதற்கு முன்பாக கேஒய்சி படிவம் நிரப்ப வேண்டும். அதன்பின் வாகனத்தில் ஆர்.சி புக், ஓட்டுநரின் இருப்பிட சான்றிதழ், அடையாள சான்றிதழ், ஓட்டுநரின் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் ஓட்டுநரின் ஃபாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியன முறையாக சமர்பித்த பிறகே ஃபாஸ்ட் டேக் கார்ட்டை பெற முடியும்.

ஃபாஸ்ட் டேக் கார்ட் பயன்பாடு முறை
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெஃப்ட், நெட் பேங்கிங் ஆகிய வசதிகள் மூலம் 100 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம். ஃபாஸ்ட் டேக் பயன்படுத்துபவர்களுக்கு தனியாக ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுக்கப்படும் அதன்மூலம் இருப்புத் தொகையை கண்டறிந்துக் கொள்ளலாம். அதேபோல் பதிவிட்ட தொலைபேசி எண்ணுக்கும் பணம் பிடித்தவுடன் இருப்புத் தொகை காண்பிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*